தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பி.செட்டி அள்ளி ஊராட்சி பாறையூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ஒன்றிய குழு உறுப்பிணர் முத்துசாமி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

பாறையூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில் 4.14 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி குமுஉறுப்பினர் கந்தசாமி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஊர் கவுண்டர்கள் குப்புசாமி, சிவலிங்கம், சங்கர், மயில், சஞ்சய், அன்பு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.