இந்த கூட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் வீரன் மற்றும் சந்தோஷ் தலைமை தாங்கினார்கள். இந்தியன் வங்கியை சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் நகர கூட்டுறவு வங்கியின் செந்தில் வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி விடுமுறை விட வேண்டும், ஓய்வு பெற்றவர்களின் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் வாங்கவேண்டும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும், காலியான இடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கியை சேர்ந்த கௌதம், செம்முனியன், லட்சுமணன், ஜெய், பிரபாகரன், அனிதா, ராமேஸ்வரி, சாந்தி, காவியா, பூஜிதா, இந்துமதி, ரூபியா மற்றும் ராதிகா உள்ளிட்டோரும், இந்தியன் வங்கியை சேர்ந்த ராம் நிஷாந்த், ஸ்வேதா, முருகன், விஜி இம்மானுவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.