Type Here to Get Search Results !

தர்மபுரி தி.மு.க. அலுவலகத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

விழாவுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரேணுகாதேவி, ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பாரம்பரிய முறைப்படி சர்க்கரை பொங்கல் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 


இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், கருணாநிதி செல்வராஜ், முருகேசன், முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி துரைசாமி, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் சாதிக், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பொன் மகேஸ்வரன், முத்துலட்சுமி, காசிநாதன், கவுதம், ரஹீம், ராஜா, ரவி, குமார், நகர நிர்வாகிகள் முல்லைவேந்தன், அன்பழகன் சுருளிராஜன் சம்பந்தம் கோமளவள்ளி ரவி,கனகராஜ், வக்கீல் அசோக் குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies