பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இப் பொங்கல் விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் ஒருமைப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும், சுகாதாரத்துடன் வாழ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் கங்காதரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சரண்யா பாலாஜி மற்றும் வள்ளல் அதியமான் நற்பணி மன்றத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

