தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் சார்பில் இளையோர் சிந்தனை அரங்கம் இணைய வழியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் நிறுவனர் முனைவர் சே.சுரேஷ் தலைமை வகித்தார். சின்னபள்ளத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி முன்னிலை வகித்தார்.
தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் தலைவர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார்.
தமிழின் நிலை என்ற தலைப்பில் த.தங்கமுத்து, நான் எதிர்பார்க்கும் நல்ல சமூகம் என்ற தலைப்பில் ம.அருள்குமார் , இயற்கை உணவு என்ற தலைப்பில் சின்ன வத்தலாபுரம் மாணவி ர.செளபரணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இணைய வழியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.