அதன் பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பல இளைஞர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று, இப்படி பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கிடைத்த அனுமதியை மீண்டும் இழக்கும் நிலைக்கு தமிழ்நாடு சென்றுகொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டு தொடக்கம் முதலே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது, அரசு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வழிகாட்டு நெறிமுறைகளாக வழங்கினாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது எனில் தவறு எங்கோ நடக்கிறது என்று தானே பொருள்.
நேற்று தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பது சோகமான நிகழ்வு, மற்ற போட்டிகளில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது மாடுபிடி வீரர்கள் ஆனால் இந்த போட்டியில் எப்படி வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன் மாடு முட்டி மரணம் அடைந்தார்?
சிறுவனை மாடு முட்டும் காணொளியில் அந்த சிறுவன் இருந்த இடத்தில் அருகில் கதவு ஒன்று உள்ளது, வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் எப்படி கதவை திறந்து களத்திற்கு உள்ளே சென்றான்? அந்த கதவின் பாதுகாவலர் எங்கே போனார்? அல்லது அவரே சிறுவனை உள்ளே அனுமதித்தாரா? அல்லது அந்த கதவிற்கு பாதுகாவலர் இல்லையா? கதவிற்கு பூட்டு போடாமல் விடப்பட்டதா? என்ற கேள்விகள் எழுகிறது.
இவ்வளவு ஆபத்து நிறைந்த விளையாட்டில், போட்டிகள் நடத்தப்படும் முன்பு பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட்டதா? அவ்வாறு நடத்தபட்டது எனில் அதில் மெத்தனம் காட்டப்பட்டதா?
என்னதான் வீரம், பண்பாடு, கலாச்சாரம் என பேசினாலும் இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை நிச்சயம் களையப்பட்டு நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த ஜல்லிக்கட்டில் நடைபெற்ற இந்த மரணத்திற்கு முழுக்க முழுக்க பாதுகாப்பு குறைபாடு தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
பாதுகாப்பு பணியை சரியாக மேற்கொள்ளாத விழா குழுவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்து நடைபெறும் போட்டிகளில் பாதுகாப்பு அதிகாரிகளை (workplace safety professionals) கொண்டு பாதுகாப்பு முன் தணிக்கை நடத்தி அரசிற்கு சமர்ப்பித்து, அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்பதே மக்களின் கோரிக்கை.
இது உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கீழே கமெண்ட் செய்யவும்.