Type Here to Get Search Results !

தருமபுரி மேற்கு மாவட்டம் அரூரில் சமத்துவ பொங்கல் விழா; மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.


அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா மணிமண்டபம் எதிரே திமுக நகர கழகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நகர திமுக செயலர் முல்லைரவி தலைமை வகித்தார். அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் வழங்கினார்.


இந்த விழாவில் திமுக தீர்மான குழு செயலர் கீரை எம்.எஸ்.விசுவநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் சா.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.சென்னகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலர் செ.கிருஷ்ணகுமார், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, ஒன்றிய செயலர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சி.தென்னரசு நகர அவைத் தலைவர் காதர்பாஷா, துணைச் செயலர்கள் விண்ணரசன், தயாளன், நகர பொருளர் மோகன்,  மாவட்ட பிரதிநிதிகள் குமரன், தயாளன்,   பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வணிகர் சங்க தலைவர் ஏ.வி.சின்னசாமி தொழிலதிபர் சபீர் அலாவுதீன் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார்  மாவட்ட வர்த்தரணி அமைப்பாளர் வெங்கடேன் முஜீப் ரகுராமன் நாகராஜ் ஒன்றிய பிரதிநிதகள் கணேசன் நெப்பொலியன் கவிதாரகுபதி  விஜியன்காஞ்சனா விட்டல்சரவணன் என்.குப்பன் பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி சரிதா  ஜெயலஷ்மி உமாராணி மகாலட்சுமி வினோதினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies