தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பாஜகவின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் ஊர்வலம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளரும்,ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளருமான சோ.அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பாஜகவின் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து பென்னாகரம் முத்துகவுண்டர் திருமண மண்டபம் அருகில் இருந்து டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் ஊர்வலம் துவங்கியது, நாகமரை ரோடு, வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், முள்ளுவாடி, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற ஊர்வலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நிறைவுற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமார்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆ.ஜீவானந்தம், அன்பு, சக்கரைவேல், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மக்கள் அதிகாரம் அன்பு, பெண்கள் ஒருங்கிணைப்பு குழு தோழியர் ரங்கநாயகி, சிபிஐ பகுதி குழு செயலாளர் ரவி, சக்திவேல், ஆர் சின்னசாமி, விதொசா மாவட்ட பொருளாளர் எம் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.