தருமபுாி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள வெங்கடசமுத்திரத்தில் மறைந்த திராவிட கழக மூத்த நிர்வாகியான வேங்கன்- திருவுருவ படம் திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திக தலைவர் கி. வீரமணி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக ஆளுனர் நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியையும் கொச்சைப்படுத்துகின்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக ஆக்குகின்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கை ஆகும். ஏனென்றால் ஆளுநர் என்பவர் அரசு ஊழியர், ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் கிடையாது.
ஏதாவது அரசியல் நெருக்கடியை உருவாக்க வேண்டும் அல்லது ஆட்சியை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயமாக தமிழக மக்களுக்கு ஒரு போதும் இடம் தர மாட்டார்கள் மிகப்பெரிய அளவிலே ஏமாறுவார்கள். அமைச்சரவையில் கொள்கை முடிவுகளை எடுத்து அந்த கொள்கை முடிவுகளை விளக்கமாக சொல்வதற்கு தான் ஆளுநர் உரை.தனியாக கருத்துக்களை சொல்வதற்கு வாய்ப்புகள் கிடையாது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இப்படி தமிழக சட்டமன்றத்தில் நடந்ததே கிடையாது முதல்முறையாக தற்போது நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. இதை நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கண்டித்து வேண்டும். இன்றைய நாளை கருப்பு நாள் என அறிவிக்க வேண்டும். அதை விளக்கி நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை திராவிட மேற்க்கொள்ளும் என்றார்.
- எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.
.gif)

