தருமபுரி,ஆக. 28:
2026-27ஆம் கல்வியாண்டிற்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டமான PM YASASVI – Top Class Education in Schools for OBC, EBC & DNT Students திட்டத்தின் கீழ் தகுதியான மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் Top Class School என அறிவிக்கப்பட்டுள்ள, 2025-26ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்.
ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவி
ஒன்றிய அரசின் இத்திட்டத்தின் கீழ், கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக,
- 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – ரூ.75,000 வரை
- 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – ரூ.1,25,000 வரை
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் 30 சதவீத இடங்கள் மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
யார் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், 2025-26ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்ற பள்ளியில் பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கு ஆக.31 கடைசி நாள்
கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவியர்கள், நடப்பாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் நிலையில் தங்களது கல்வி உதவித்தொகையை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பத்தை உறுதிசெய்து, 31.08.2026க்குள் Renewal விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் 15.09.2026க்குள் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்ப தேதி தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)