தொடர்ந்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி சனிக்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கலசங்கள் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றதுடன், சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளித்தனர். இதையடுத்து ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
விழாவில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பக்தியுடன் தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
.gif)

