தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டுவதற்கான பணியினை பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், நகர செயலாளர் கோவிந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதாசரவணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

