இந்நிகழ்வில் ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவிலின் பூசாரிகள் மற்றும் ஊர் கவுண்டர் மற்றும் மந்திரி கவுண்டர் ஊர் நாயுடு, ஊர் பெரியவர்கள் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
மேலும் கூத்தப்பாடி கிராமத்தில் ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கிராமம் நிறைய பண்பாடு மற்றும் கலாச்சார பெருமைகளை கொண்டது இந்த வருடம் முதல் முறையாக ஊரில் உள்ள அனைவரும் ஊரின் மையப்பகுதியான நடு வீதியில் கூடி பொங்கல் வைத்து படையல் இட்டு சூரியனை வழிபட்டனர். பொங்கல் வைக்க தேவையான பொருட்களை அவர்களே எடுத்து வந்து இருந்தனர்.
இறுதியில் பொங்கல் வைத்த அனைவருக்கும் விழாக் குழுவினர் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர் கவுண்டர் மாதையன், கட்டாமணி கவுண்டர் செந்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கூத்தப்பாடி மா.பழனி தலைமை ஆசிரியர், இளந்தென்றல் சரவணன், கோவிந்தசாமி, தாமோதிரன், மற்றும் விழாக் குழுவினர் என பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)