Type Here to Get Search Results !

சித்தேரி ஊராட்சியில் தைதிருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சித்தேரியில் சமத்துவ பொங்கல் கொண்டப்பட்டது, இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கோவிந்தம்மாள் சண்முகம்  துணை  தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஆசிர்வாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தூய்மை காவலர் துப்புரவு பணியாளர்கள் பள்ளி குழந்தைகள்ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

சமத்துவ பொங்கல் விழாவில் சித்தேரி ஊராட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரதநாட்டியம், கரகாட்டம், பேச்சுப்போட்டி, கோலப்போட்டி கிராமப்புற கும்மி பாடல் மற்றும் பொங்களைகக் குறித்த விழிப்புணர்வு நடனம் சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்றன. இதில் ஊரில்  உள்ள முக்கியபிரதிநிதிகள் கலந்து கொண்டன. இந்த வருடம் 2023 ஜனவரி 13 மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


கோலப்போட்டி கிராமத்துக் கும்மிப்பாடல் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் பேச்சுப் போட்டியில் சிறப்பாக பங்கேற்றிய மாணவிக்கு  சிறப்பு பரிசு வழங்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies