தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் உணவு திருவிழாவினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று (21.01.2023) திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜி.கே.மணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தாமரைச்செல்வன், முன்னாள் அமைச்சர் முனைவர் திரு.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், நகர மன்றத்தலைவர் திருமதி எம்.லட்சுமி உட்பட, தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஊள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.