இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.இரா. ஜெகன்நாதன் அவர்கள் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக பதிவாளர் முனைவர். பாலகுருநாதன், தேசிய தர மதிப்பீடு குழு இயக்குனர் யோகானந்தன், பல்கலைக்கழக தொழில் நிறுவன ஒப்பந்த அமைப்பு இயக்குனர் சுப்பிரமணிய பாரதி, பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சார்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரமேஷ், மேலாண்மையில் துறை தலைவர் இஸ்மாயில், வெளிநாட்டு தொடர்பு துறைக்கான தலைவர் ரியா ரோலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெளியுறவு தொடர்புக்கான இயக்குனர் முனைவர். முருகேசன் நன்றி உரை நிகழ்த்தினார். முனைவர் கார்த்திகேயன் மேலாண்மையில் துறை பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தர்மபுரி. அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்.