இதில் சேலம், பெரியார் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜெகநாதன் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். துணைவேந்தர் தனது உரையில் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதை பற்றியும் மேலும் கலந்து கொண்டுள்ள பங்கேற்பாளர்கள் இப்ப பயிற்சி பட்டறை சரியான முறையில் பயன்படுத்தி சிறந்தஅறிவியல் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் வளர இக்களத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் பேராசிரியர் முனைவர் சேது குணசேகரன், அவர்களும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜெய்சங்கர் அவர்களும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பி ராமமூர்த்தி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் இயற்பியல் துறை தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் செல்வ பாண்டியன் வரவேற்று பேசி இப்ப பயிற்சி பட்டறைக்கான நோக்க உரையும் வழங்கினார். இறுதியாக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரசாத் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கு பெற்ற பயனுற்று வருகின்றனர்.