Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி  வடக்கு ஒன்றிய  அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதாசரவணன்  தலைமையில் நடைப்பெற்றது.

அஇஅதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்ன டாக்டர் .எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபட்டுவருகிறது.


அதனையொட்டி  நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி  பஸ் நிலையம் அருகே உள்ள ,எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்க்கு மாவட்ட இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சரவணன் கலந்து கொண்டு  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்க்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம், கிளை செயலாளர்கள் கிருஷ்ணன், அம்மவாசி, திம்மராயன், முனுசாமி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies