Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா - பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அமமுக  நகர கழக செயலாளர் ஞனம் தலைமையில்  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா  உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேருந்து நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு நகர கழக செயலாளர் ஞானம் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து பட்டாசு வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சிக்கு   மாவட்ட  செயலாளர் மசியுல்லா, நகர அவைத் தலைவர் ஏக்பால், நகர அவைத் தலைவர் Ex பிடன்மியான், வார்டு செயலாளர் ரங்கநாதன், மகேந்திரன், காசிம், கோவிந்தராஜ், பவித்ரன், பாபு ஜான், நிசர், ராஜி மாலிக் பாஷா மாசிலாமணி வெங்கடேசன் மட்பூல், பழனி, கணேசன் 18வார்டு கிளை கழக செயலாளர், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies