தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி எட்டியாம்பட்டியில் அதிமுக கிளையின் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இன்று தமிழ்நடு முழுவதும் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. பென்னாகரம் பேரூராட்சி எட்டியாம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் பி எம் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

பென்னாகரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் பாரிவள்ளல்சுந்தரம், அதிமுக வார்டு செயலாளர் ராமச்சந்திரன், அம்மா பேரவை நகர செயலாளர் ஈ சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எட்டியாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மாதையன் சண்முகம் மணி ஆறுமுகம் அதியமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

