தர்மபுரி மாவட்டம், பெரிய குரும்பட்டி மாதுப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாயபெருமாள், ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ துவார சக்தி ஆகிய தெய்வங்களின் நூதன ஆலய நூதன பிம்ப அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 27.01.23 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு, இன்று புதிய சிலைகள் கரிக்கோலம் வருதல், தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் வருதல், சயனாதிவாசம் செய்தல் மற்றும் புதிய சுவாமிகள் ஊர்வலம் வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
