
அதனையடுத்து முதலில் மண்டு மாரியம்மன் கோவில் காளை வாடிவாசல் வழியாக திறந்து விடபட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, திருச்சி, கோவை, சேலம், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 750காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாடிவாசல் வழியாக திறக்கபட்ட காளைகள் சீறிபாய்ந்தன. அதனை ஆர்வத்துடன் இளைஞர்கள் அடக்கினர். சில காளைகள் யாருக்கும் பிடி கொடுக்காமல் சீறிபாய்ந்தன.
இந்த ஜல்லிகட்டு போட்டியை காண தருமபுரி மாவட்டம் அல்லாது அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் பெண்கள் என பலர் கண்டு களித்தனர். வாடிவாசல் அருகில் மருத்துவ குழுக்கள், தீயணைப்பு மீட்பு பணித் துறை, மற்றும் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.
இதில் முதல் பரிசாக இரு சக்கர வாகனத்தை 19 காளைகளை அடக்கிய இரண்டு பேரும், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக 16 காளைகளை அடக்கிய இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டனர். சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் படு காயமடைந்தனர்.
நெகிழ வைத்த துயர சம்பவம்.
இந்த ஜல்லிக்கட்டில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திரெளபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் இளைய மகன் கோகுல் ( வயது 15). இவர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தனது மாமா ஹரியுடன் வந்தார். காளைகள் வெளியே வரும் இடத்தில், காளை மாடு கோகுலின் வலது புறமாக வயிற்றில் குத்தியது. இதில் படுகாயமடைந்த இவர், ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த கோகுலின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால், அதற்கான பணிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.