Type Here to Get Search Results !

சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் வார விழா.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் வார விழாவாக ஜனவரி12ந் தேதி தொடங்கி 19ந்தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறது. 


பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு ஓவியப்போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியன பெரும்பாலை ஊராட்சி தலைவர் கஸ்தூரி வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சதாசிவம் முன்னிலை வகித்தார். 


தமிழ் ஆசிரியர் சீனிவாசன் மற்றும்  ஆசிரியர் கார்த்திகேயன் நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக அன்னை இந்திரா நகர் பெரும்பாலை அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அசோகன் நன்றி கூறினார். 


மேலும் தருமபுரி அருகே உள்ள தேவரசம்பட்டியில் இயங்கி வரும் எப்ரன் தொழில் பயிற்சி மையத்தில் மகளிர் கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் நேரு யுவ கேந்திராவின் சார்பில் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வழங்கினார்.


தொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் சைன் தாமஸ் முன்னிலை வகித்தார். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies