பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி பஞ்சாயத்து பூஞ்சோலை கிராமத்தில் சூரிய மின் வேலி அமைத்தல் பற்றி அங்குள்ள கிராம விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டிய அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவிகள்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அஞ்சேஅள்ளி பஞ்சாயத்து பூஞ்சோலை கிராமத்தில் சூரிய மின் வேலி அமைத்தல் பற்றி அங்குள்ள கிராம விவசாயிகளுக்கு அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.

ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவம் பெற்று வரும் அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நான்காம் ஆண்டு மாணவிகள் சி. திவ்யா, இ. ச. வித்யா, பு. இலக்கியா, மா. ஜனனி, இ. ரா. மகிமா, ர. நித்தியா ஸ்ரீ, க. பிரேமா, ர. பிரியதர்ஷினி ஆகியோர் உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் தலைமையில் பூஞ்சோலை கிராம விவசாயிகளுக்கு சூரிய மின் வேலி அமைத்தல் பற்றி செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
சூரிய மின்வேலிக்கு தமிழகத்தில் (சென்னை தவிர) மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு சார்பில் அரசு 40% மானியம் அளிக்கப்படுகிறது. சூரிய மின்வேலி அமைப்பதால் மலை பிரதேச விவசாயிகள் காட்டு விலங்குகளிடமிருந்து தங்கள் வயல்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
சூரிய மின் வேலி யின் தேவை பூஞ்சோலை கிராமத்தில் அதிகம் உள்ளதை அறிந்து முற்போக்கு விவசாயி சக்திவேல் அவர்கள் அரசின் மானியத்தைப் பயன்படுத்தி சூரிய மின் வேலியை தன் வயலுக்கு அமைத்து இருந்தார். அதனை உதாரணமாக காண்பித்து காட்டுப்பன்றி போன்ற பல விலங்குகளிடம் இருந்து தங்களது வயலை பாதுக்காக்கலாம் அங்குள்ள கிராம விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.