தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி சிறப்பாக அளித்தமைக்காகவும், தேர்தல் தொடர்பான பணிகள் சிறப்பாக மேற்கொண்டதற்காகவும் 2023-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற சிறப்பு விருதினை மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களுக்கு இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
