பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புதிய கொடி கம்பத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதுசமயம் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய கழகத்தில் உள்ள பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள், பாலக்கோடு மத்திய ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்கள், பேரூர் கழகத்தில் உள்ள 18 வார்டுகளின் உள்ள கிளை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாலக்கோடு பேரூர் கழகச் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான முரளி மற்றும் பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் அவர்கள் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
