
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் தொடந்து நிலவும் வேங்கைவயல் உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து, குடிநீரில் மலத்தை கொட்டிய சாதிவெறி வன்முறை கும்பலை உடனே கைது செய், ரெட்டிஅள்ளி கிராமம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட வீட்டுமனைகளை சீர்படுத்தி பயனாளிகளுக்கு உடனே ஒப்படை, தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடு, தாட்கோ நிறுவனத்தை சுயநிதியுடன் கூடிய தனி வங்கி உருவாக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, ஜானகிராமன் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் நீல சந்திர குமார், கட்சி நிர்வாகிகள் மின்னல் சக்தி, பாண்டியன், சாக்கன், சர்மா விஜயலட்சுமி, கப்பல் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.