தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தருமபுரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தீர்த்தராமன் மாவட்ட தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநரே ஆளுநரே முடக்காதே முடக்காதே தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை முடக்காதே, தமிழக ஆளுநரே தமிழக ஆளுநரே தமிழை புறக்கணிக்காதே சமஸ்கிருதத்தை வளர்க்காதே என்று கோசங்கள் எழுப்பப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தருமபுரி நகர தலைவர் வேடியப்பன், ஒன்றிய செயலாளர் சண்முகம், ஐஎன்டியுசி மண்டல தலைவர் தங்கவேல், சம்பத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.