தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் 74 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா அவர்கள்.
பென்னாகரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கிய குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பின்னர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் வீரமணி, துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
