Type Here to Get Search Results !

74-வது குடியரசு தினவிழா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.


தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 74-வது குடியரசு தினவிழா- 2023 இன்று (26.01.2023) நடைபெற்றது. இந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், சமாதானப்புறாக்களை வானில் பறக்கவிட்டார்கள்.

இதனை தொடர்ந்து, காவல்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 33 காவலர்களுக்கு 2023 -ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவ கல்வித்துறை, பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பாகிர்மானக்கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மீன்வாளம் மற்றும் மீனவர் நலத் துறை, தோட்டகலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, ஆவின் துறை, கருவூலத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வனத்துறை, வோளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட தொழில்மையம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமய அறநிலையத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, நீர்வளத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை ஆகிய துறை சார்ந்த மொத்தம் 234 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தின் சார்பில் 4 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 75,000/- மதிப்பீட்டிலான வருடாந்திர பராமரிப்பு மானியமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,200/- மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.33 இலட்சம் மதிப்பீட்டிலான PMMSY திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பிற்கான பயோபிளாக் குளம், புதிய மீன்வளர்ப்பு குளம் அமைப்பதற்கு மானியமும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ. 85,000/- மதிப்பீட்டிலான பவர் டில்லர்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ. 66,675/- மதிப்பீட்டிலான சலவைப்பெட்டி, இலவச தையல் இயந்திரங்களும், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 11.25 இலட்சம் மதிப்பீட்டிலான சுமை வாகனம், சுற்றுலா வாகனம், டிராக்டர்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 24,000/- மதிப்பீட்டிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்கள் செயல்விளக்கங்களும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டிலான இயற்கை மரண உதவித்தொகைகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.62.45 இலட்சம் மதிப்பீட்டிலான ஆயத்த ஆடை தயாரிப்பு, பருப்பு மில் அமைத்தல், தானியங்கி இயந்திரங்கள் தயாரித்தல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டிலான காளான் வளர்ப்பு கூடம், தேசிய தோட்டக்கலை இயக்கம் வீரிய ரக காய்கறிகள் பரப்ப விரிவாக்கம் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.8,196,075/- மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் காவல்துறையின் இசைக்குழு முழுங்க காவல் உதவி ஆய்வாளர் திரு.மாதையன் அவர்கள் தலைமையிலும், காவல்துறையின் கம்பெனி கமெண்டனர் காவல் ஆய்வாளர் திரு.ஆர்.வெங்கடாசலம் அவர்கள் தலைமையிலும், முதல் அணித்தலைவர் தருமபுரி ஆயுதப்படை காவல் உதவியாளர் திரு.பி.சின்னசாமி அவர்கள் தலைமையிலும், இரண்டாம் அணித்தலைவர் தருமபுரி ஆயுதப்படை காவல் உதவியாளர் திரு.எஸ்.சதிஷ்குமார் அவர்கள் தலைமையிலும், மூன்றாம் அணித்தலைவர் தருமபுரி ஆயுதப்படை காவல் உதவியாளர் திரு.சி.மணிமாது அவர்கள் தலைமையிலும், தீயனைப்பு படை தலைவர் திரு.எஸ். செல்வம் அவர்கள் தலைமையிலும், ஊர் காவல் படை திரு.சாமுவேல் சதிஸ் அவர்கள் தலைமையிலும், என்சிசி மாணவர் படை அணி கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.மோகன் தலைமையிலும், என்எஸ்எஸ் மாணவர் படை அணி இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.கே.கோகுலகார்திக் தலைமையிலும், ஸ்கெளட் மாணவர் படை அணி பச்சமுத்து மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வன்.கே.பி.கிருதிஸ்குமார் தலைமையிலும், கெய்டு மாணவர் படை அணி மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செல்வி.கே.சத்தியே ஸ்ரீ தலைமையிலும், ஜேஆர்சி மாணவர் படை அணி நாகர்கூடல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.மலர் தலைமையிலும் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள்.


இன்று நடைபெற்ற 74-வது குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேச பக்திப் பாடலுக்கான நடனமும், நாட்டுப்புறப் பாடலுக்கான நடனமும், எங்கள் பாரதம், லெசிம் பாடலுக்கான நடனமும், சிலம்பம் மற்றும் தற்காப்புக்கலை நிகழ்வு என பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு, பள்ளிகளுக்கு கேடயங்களையும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுசான்றிதழ்களையும், வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ந.ஸ்டீபன் ஜோசுபாதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.என்.பழனிதேவி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, தருமபுரி நகரமன்ற தலைவர் திருமதி. மா.லட்சுமி, தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. எம். யசோதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, தருமபுரி வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884