Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் உள்ள 18 வார்டுகளிலும் மாபெரும் கோலப்போட்டி பெண்கள் திரளாக பங்கேற்க பேரூராட்சி தலைவர் அழைப்பு..


பாலக்கோட்டில் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் மாபெரும் கோலப்போட்டி இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் நடைபெற்று வருவதையோட்டி பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி சார்பிலும் சமத்துவ பொங்கல் விழா, மற்றும் விளையாட்டு போட்டிகள்,  மற்றும் 18 வார்டுகளிலும் மாபெரும் கோலப்போட்டிகள் நடைபெற உள்ளது. 


இதில் வெற்றி பெறும் பெண்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 4000 ரூபாய், மூன்றாம் பரிசாக 3000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட உள்ளன. மேலும்  40 நபர்களுக்கு  ரூபாய் 1000 மதிப்புள்ள ஆறுதல் பரிசு என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 


இதனையோட்டி பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளிலும் உள்ள பெண்கள் தங்களது வீட்டின் முன்புறம் சிறப்பான முறையில் கோலமிடும் பெண்களுக்கு சிறப்பு நடுவர்களை வைத்து தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும். இதனையோட்டி பெண்கள் இந்த சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறும் கோலப்போட்டியில் திரளாக கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும் என பேரூராட்சி தலைவர் முரளி அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies