Type Here to Get Search Results !

தர்மபுரி நகர 18 மற்றும் 19வது வார்டுகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


தமிழக முன்னாள் முதல்  அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். 106-வது பிறந்த நாள் விழா தர்மபுரி பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலை மற்றும் உருவப்படங்களுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

தர்மபுரி 18வது வார்டில் நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமையில், நகர மன்ற உறுப்பினர் செந்தில்வேல், சுரேஷ்குமார், இஸ்மாயில், சிவசஞ்சய், கார்த்திக், முன்னா, ஐஸ் ராஜா, சத்யா, விஜயலட்சுமி, கற்பகம், ராஜலட்சுமி, சரிதா, மேனகா மற்றும் வார்டு பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு எம்ஜிஆரின்  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

இதேபோல் 19 வது வார்டில் பூக்கடை ரவி மற்றும் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் தலைமையில், வார்டு செயலாளர் நாகேந்திரன், நகர மன்ற உறுப்பினர் உமையாம்பிகை நாகேந்திரன், பொருளாளர் கண்ணன், துணை செயலாளர் ஆறுமுகம், சுரேஷ் கார்த்திக், ராகுல், பாலாஜி, சந்தோஷ் மற்றும் வார்டு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு எம் ஜி ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies