Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக  நகர கழக செயலாளர் ராஜா தலைமையில்  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா  உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பேருந்து நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு முன்னாள் வேளாண்மை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து பட்டாசு வெடித்தும் , பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சிக்கு   மாவட்ட  அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன்,  ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில்,  மாவட்ட கூட்டுறவு தலைவர் பொன்னுவேல், முன்னாள் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், ஆவின் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், நகர இணை செயலாளர் லட்சுமிகுழந்தை, மு.பேரூராட்சி து.தலைவர் கோவிந்தசாமி, மு.நகர து.செயலாளர் கண்ணையன், மு. மாணவரணி செயலாளர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் கிரி,கவுன்சிலர், விமலன், குருமணி, எம்ஜிஆர் மன்றம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய மாணவரணி வீரமணி, அக்ரோ முன்னாள் தலைவரே சாம்ராஜ், நகர அவைத்தலைவர் முத்துஜா, சிவராஜ், பசுபதி,  18வார்டு கிளை கழக செயலாளர், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies