தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 126வது பிறந்த தினம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் அரங்காபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமையில் நடைபெற்றது.கிராம தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் அஞ்சேஅள்ளி ஊராட்சி தலைவர் லக்ஷ்மணன் வழங்கி சிறப்பித்தார்.
சின்னபள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தருமன், பென்னாகரம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சம்பத்குமார், ஆசிரியர் பாரதிராஜா முன்னாள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முருகன் மற்றும் சர்வேயர் ஓய்வு பெற்ற ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் 100க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் வரவேற்றார், நிறைவாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அபிநாத் நன்றி கூறினார்.