தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தில் விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் அதிமுக கொடி ஏற்றியும் எம்ஜிஆரின் திருவுருவர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே போல் கிட்டம்பட்டி, திருமல்வாடி, எட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலுமணி ஒன்றிய கழகச் செயலாளர் பெரியண்ணன் கூட்டுறவு வங்கி தலைவர் வி. பி.சுந்தரம் வேலம்பட்டி விக்ரம விஜயன், கமலேசன், கிளைச் செயலாளர் பழனிசாமி, செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
.gif)

