தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (28.12.2022) நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2022-23ம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சமந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.சாந்தி, தருமபுரி மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தலைவர் திரு.பாஸ்கர், கால்பந்து விளையாட்டு சங்கத்தலைவர் திரு.ஆனந்தன், இறகுபந்து விளையாட்டு சங்கத்தலைவர் திரு.கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.