கடத்தூர் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டட கட்டுமானப் பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் யசோதா மதிவாணன், பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், நூலகர் சி. சரவணன், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ், ரவீந்திரன், அம்பேத்கர், கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் வாசகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.