இதற்க்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சாம்ராஜ், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் சதிஷ் குமார், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், அரசு துறையில் உள்ள 6 இலட்சம் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவைகளை உடனே வழங்க கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற கோரியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து இழப்பீடு வழங்கிட, நிலுவை ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ருத்ரையன் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
