Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (26.12.2022) நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 431 மனுக்கள் வரப்பெற்றன.


அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் காதொலிக்கருவி வழங்க வேண்டி பெறப்பட்ட மாற்றுத்திறனாளி மனுதாரருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உடனடியாக ரூ.7000/- மதிப்பிலான காதொலிக்கருவினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாற்றத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.17,000/- வீதம் 16 நபர்களுக்கு என மொத்தம் ரூ.2,79,000/- க்கான காசோலையிணையும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கும்மனூர் கிராமத்திலிருக்கும் திருமதி.பாஞ்சாலி க/பெ ராஜா, நீலாஞ்சனூர் கிராமத்திலிருக்கும் திருமதி.சுசீலா க/பெ சங்கரன் ஆகிய 2 நபர்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டாகளையும், தருமபுரி மாவட்டம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் திருமதி.எம்.வாசுகி என்பவர் சத்துணவு மைய சமையலராக பணிபுரிந்து உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21.05.2021 அன்று பணியின்போது மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் மகளுமாகிய திருமதி.ரா.வசந்தி க/பெ ராஜா என்பவருக்கு கருணை அடிப்படையில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எர்ரனஅள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளராக பணி நியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.வி.இராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.பொ.செண்பகவள்ளி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884