Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

வங்கிகள் மூலமாக நிதி உதவியினைப் பெற்று புதியதாக தொழில் தொடங்க ஆர்வம் மிக்க தொழில் முனைவோர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்காண புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டம் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் திட்ட முதலீடு 50 லட்சமாகவும் அதிகபட்ச மானியம் 17.50 லட்சமாகவும் அதிகரிப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட புதிய தொழில் திட்டங்கள் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி உதவியினைப் பெற்று புதியதாக தொழில் தொடங்க ஆர்வம் மிக்க தொழில் முனைவோர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்காண புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இத்திட்டம் காதி மற்றும் கிராம தொழில் வாரியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்த நிதிஆண்டு முதல் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான திட்டங்களும், சேவைத் தொழில்களுக்கு, ரூ.20 லட்சம் வரையிலான திட்டங்களும் அனுமதிக்கப்படும். பொது பிரிவு பயனாளிகளுக்கான மானியம் ஊரகப் பகுதியில் தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 25% எனவும், நகர் பகுதியில்
தொடங்கப்படுவதற்கு 15% எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு மானியம் ஊரகப் பகுதியில் தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% எனவும், நகர் பகுதியில் தொடங்கப்படுவதற்கு 25% எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த படிக்காதவர்களும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம். உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் திட்ட மதிப்பீடு இருந்தால் பயனாளி குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இந்த ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள், ஆட்டு பண்ணை, மாட்டுப்பண்ணை, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழில் இனங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மாவட்ட இலக்கீட்டில் தலா 10% பயன்பெற
அனுமதிக்கப்பட்டுள்ளது.


மேலும், PMEGP & SFURTI திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகம் அமைக்க ரூ.20 லட்சம் வரை கடன் அனுமதி வழங்கப்படும். ரூ.2 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு பயிற்சி தேவையில்லை. ரூ.5 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு 5 நாட்களும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு 10
நாட்களும் நேரடியாகவோ இணையதளம் வாயிலாகவோ பயிற்சி பெற வேண்டும்.


இம்மாவட்டத்திற்கான 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கு மாவட்ட தொழில் மையத்திற்கு 201 நபர்களுக்கு 585 இலட்சம் மானியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்திற்கு 38 நபர்களுக்கு 110 இலட்சம் மானியம், காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கு 74 நபர்களுக்கு 90 இலட்சம் மானியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் கீழ்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியுடையவையாகவும் தக்க ஆவணங்களுடனும் இருப்பின் பரிசீலனைக்குப்பின் இணையதளம் வாயிலாகவே வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். இணையதள முகவரி : www.kviconline.gov.in/pmegp மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியிலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகவும். தொலைபேசி எண்: 04342 230892 / 89255 33941 / 89255 33942 / 89255 33940 ஆகிய தொலைபேசி எண்களிலும் அழைக்கலாம்.


இத்திட்டத்தின் மூலமாக ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884