தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக நரிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நாக மரத்து பள்ளம் என்ற சிறிய கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

அதன் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சகுந்தலா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள் மேலும் கூட்டத்தில் திட்ட அலுவலர் திரு ஜே பாரதிதாசன் மற்றும் உதவி திட்ட அலுவலர் திரு வி லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்
