தருமபுரி - பென்னாகரம் சாலையில் அமைந்திருக்கும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நம்மாழ்வார் விருது வழங்கும் விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மகேந்திரன், தருமம் அறக்கட்டளை நிறுவனர் சின்னமுத்து , டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிறுவனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு நம்மாழ்வார் விருது-2022 வழங்கினார்கள்.

இவ்விழாவில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அதிக மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்து வரும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் எர்ர பையன் அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் அவர்களின் பசுமை பாதுகாப்பு பணியை பாராட்டி அவருக்கு நம்மாழ்வார் விருது-2022 விருதினை வழங்கி பாராட்டினார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளை விழாக்குழுவினர் வழங்கினார்கள். விழாவில் முன்னதாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
