மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் வட்டார அளவில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் உணவு பதப்படுத்தும் மற்றும் உணவு சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள தனிநபர், மகளிர் சுய உதவிகுழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஆகியோருக்கும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், இயந்திரத்திற்கான விலைப்பட்டியல், வாடகை ஒப்பந்தம் அல்லது நிரப்பத்திரம் அல்லது மின்கட்டண ரசீது ஆகிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்து, கடன் பெற்று தொழில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

- பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் 23.12.2022 அன்று காலை 10.00 மணிக்கும்,
- கடத்தூர் கர்த்தானூர் சேவை மையத்தில் 23.12.2022 அன்று காலை 10.30 மணிக்கும்,
- ஏரியூர் - நெருப்பூர் ரோடு தின்னபெல்லூர் சேவை மையத்தில் 23.12.2022 அன்று காலை 11.00 மணிக்கும்,
- பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் 23.12.2022 அன்று காலை 11.00 மணிக்கும்,
- தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் 23.12.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கும்,
- கடத்தூர்- புளியம்பட்டி சேவை மையத்தில் 23.12.2022 அன்று பிற்பகல் 02.30 மணிக்கும்,
- பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் 23.12.2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கும்,
- மொரப்பூர் ஒன்றியம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் 27.12.2022 அன்று காலை 11.00 மணிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெறும்.
புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94435 13908, 63839 04116, 89034 93191, 95856 13587, 96777 29965 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
