பென்னாகரம் கூத்தப்பாடியில் நாட்டு நலப் பணி திட்ட முகாம், பென்னாகரம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்துப்பாடியில் பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகம் நடைபெற்றது
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலப்பம்பாடி மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் சார்பில் கூத்தப்பாடி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டு கூத்தப்பாடி பகுதியில் தூய்மை பணியை மேலும்ஊர் புறத்தூய்மை, தூய்மை பாரதம், இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு, வாசிப்பின் அவசியம், பெண் கல்வி அவசியம் ஆகியவை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினர்.

மேலும் கலை நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய நாட்டு நலப்பணி திட்டம் முகாம் வருகின்ற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகிறது. இந்த முகாமினை நாட்டு நலப்பணி கட்ட ஆசிரியர்கள் சரவணன், கஞ்சப்பழனி மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்தனர்.
