Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி.


ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் சிறப்புப் பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 

இது ஒரு தொடர் பணியாகும். கணக்கெடுப்பிற்கான தரவுகள் அனைத்தையும் உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கைபேசி செயலி (Mobile App) மூலம் 2022 -23 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி அனைத்து ஒன்றியங்களிலும் டிசம்பர் 19 முதல் ஜனவரி 11 வரை எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக (Door to Door Survey) கணக்கெடுப்பு பணிநடைபெற்று வருகிறது.


ஒன்றிய அளவில் கணக்கெடுப்பில் ஈடுபடும் களப்பணியாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் (IE–Special Educators), இயன் முறை பயிற்சியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, கல்வி தன்னார்வலர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவன பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் 0 முதல் 18 வயது வரையுள்ள மாறறுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ள சார்புடைய அனைத்து துறையினரின் ஒத்துழைப்பையும் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


100 சதவிதம் மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் (21 வகை – பார்வையின்மை (Blindness), குறை பார்வையின்மை (Low vision), செவித்திறன் குறைபாடு (Hearing Impairment), உடலியக்கக் குறைபாடு (Locomotive Disability), தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் (Leprosy cured), குள்ளத்தன்மை (Dwarfism), அறிவுசார் குறைபாடு (Intellectual Disability), மனநோய் (Mental Illness), புற உலக சிந்தனை குறைபாடு அல்லது மன இறுக்கம் (Autism Spectrum Disorder), மூளை முடக்கு வாதம்(Celebral palsy), தசை சிதைவு நோய் (Muscular Dystrophy), நாட்பட்ட நரம்பியல் குறைபாடு (Chronic Neurological conditions), குறிப்பிட்ட கற்றல் குறைபாடு (Specific Learning disability), திசு பன்முக கடினமாதல் (Multiple Scierosis), மற்றும் மொழித்திறன் குறைபாடு (Speech and Language disability), இரத்த அழிவு சோகை (Thalassemia), குருதி உறையாமை (அ) இரத்த ஒழுக்கு குறைபாடு (Hemophilia), அறிவாளணு ரத்த சோகை (Sickle cell disease), அமில பாதிப்புக்குள்ளானோர் (Acid victims), நடுக்கு வாதம் (Parkinson disease) மற்றும் பன்முக குறைபாடுகள் (பார்வை இன்மையோடு செவித்திறன் குறைபாடு) Multiple disabilities including deaf blindness.) ஆகியோர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு களப்பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற்று வருகின்றது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884