
அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய குழு நிதியில், ஏலகிரி ஊராட்சி, கயிறுகாரன்கொட்டாய் கிராமத்தில் அமைக்கப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு மற்றும் கொத்தமல்லிகாரன்கொட்டாய் கிராமத்தில் அமைக்கப்பட்ட 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ஏலகிரி ஊராட்சி, ஒமல்நத்தம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் டொக்குபோதனஅள்ளி ஊராட்சி, தாதநாய்க்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் தலா 2 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரிபெரியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் த.காமராஜ், வட்டார கல்வி அலுவலர் த.மு.சரவணன், தலைமை ஆசிரியர்கள் – சி.ஆனந்தவேல், கே.கமலா, பாமக மாவட்ட நிர்வாகி இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் - கிருஷ்ணமூர்த்தி, பச்சமுத்து, பசுமை தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ஒன்றிய தலைவர் சிவபிரகாசம், ஒன்றிய பொறுப்பாளர் போர்மன்னன் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்
