ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் நல்லம்பள்ளி பள்ளி ஆயத்த பயிற்சி மையம் அவ்வை நகரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கலை நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி லட்சுமி அவர்கள், உறுப்பினர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு செல்வகுமார் அவர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மேரி ஸ்டெல்லா அவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) திரு மகாலிங்கம் அவர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன் முறை மருத்துவர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார் கலை நிகழ்ச்சியினை பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாற்றுத்திறன் குழந்தைகள் பற்றிய கருத்துக்கள் கூறினார்.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் நன்றி உரை வழங்கினார்.
