பொம்மிடி அருகே 50 கிலோ எடையுள்ள 5 வயது புள்ளிமான் சுட்டுக் கொலையா? இறந்த மானை மீட்ட வனத்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள தர்மபுரி சேலம் மாவட்ட எல்லையில் சேர்வராயன்மலை உள்ளது, இந்த மலை காடுகளை ஒட்டு தனியார் நிலகிழார் ஒருவரது தோட்டம் 100 ஏக்கர் உள்ளது, இந்த நிலப்பகுதியில் மர்மமான முறையில் 5 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் 1 இறந்து கிடந்தது

இதன் எடை 50 கிலோ இருக்கலாம், இந்த நிலப் பகுதி உரிமையாளர் துப்பாக்கியுடன் அடிக்கடி சுற்றி வருவதால், இந்த மானை யாராகிலும் மர்ம நபர்கள் சுட்டு கொன்றிருப்பார்களா ?அல்லது நாய்களால் கடிபட்டு இறந்திருக்குமா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன புள்ளி மான் தற்போது பொம்மிடியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது, நாளை கால்நடை மருத்துவர் மூலமாக உடற்கூறு ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்.
