அரூர் அக்ரஹாரம் கிராமத்தில் வேளாண்மை துறை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை அலுவலர் திருமதி தேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு மண் மாதிரி எடுக்கும்போது விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் மண் மாதிரி எடுப்பதன் பயன்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
மேலும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்யும் முறை அதன் பயன்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் திரு குமார் அவர்கள் கலந்துகொண்டு வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் அகிலன் அவர்கள் கலந்து கொண்டு பெரியம்மை நோய் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திரு வேலுசாமி அவர்கள் கலந்துகொண்டு வேளாண் பொறியியல் துறையில் உள்ள மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சி துறையில் இருந்து பட்டு வளர்ச்சி அலுவலர் திருமதி சசிகலா அவர்கள் கலந்துகொண்டு பட்டு வளர்ச்சி துறையில் உள்ள மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண் உதவி அலுவலர் திரு கோபிநாத் அவர்கள் கலந்துகொண்டு மதிப்பு கூட்டுதல் மற்றும் வேளாண் விலை பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் உழவர் சந்தை அதன் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் அவர்கள் கலந்துகொண்டு உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி அவர்கள் கலந்து கொண்டு நன்றியுரை வழங்கினார்கள் மேலும் இப்பயிற்சியில் வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
