தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூரில் செயல்பட்டு வரும் விப்ரோ தொண்டு நிறுவனம் மற்றும் தர்மபுரி நபார்டு வங்கியுடன் இணைந்து நுண்தொழில் எம் இ டி பி வளர்ச்சி திட்ட பயிற்சி துவக்கப்பட்டது. இதில் விப்ரோ இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.

பயிற்சியில் எஸ் பிரதாபன் இயற்கை வேளாண்மை கலந்துகொண்டு பயிற்சி பற்றி விளக்கினார். இதில் 30 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் பெண்களுக்கு தென்னை மர விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எழிலரசி கார்த்திகா கலந்து கொண்டு நன்றியுரை ஆற்றினார்.
